search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர் தனபால்"

    3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம். தேர்தலை சந்திப்போம் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். #vetrivel #dinakaran
    சென்னை:

    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச் செல்வன், பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரனை பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்து சிலிப்பர் செல்லாக செயல்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்வி கேட்டனர்.

    எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டோம் தேர்தலை சந்திப்போம். நாங்கள் அ.தி.மு.க.வுக்கு எதிரான அணி இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் தனி அணி கிடையாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தபோதுகூட அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் மட்டும்தான் எம்.எல்.ஏ. என்று குறிப்பிட்டோம். சட்ட பாதுகாப்பு கேட்டு டெல்லி ஐகோர்ட்டிலும் தொடரப்பட்ட வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கூறியிருந்தோம்.

    இப்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டை மீறி எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் நாங்கள் தகுதி நீக்கம் வழக்கில் மேல் முறையீடு போகாமல் தேர்தலை சந்தித்தோம். இந்த 3 பேர் விவகாரத்திலும் அந்த நடைமுறையை பின்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vetrivel #dinakaran
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சபாநாயகர் தனபால் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. #MLAsDisqualificationCase #TNAssemblySpeaker #MadrasHC
    சென்னை:

    தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கை 3வது நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்து வருகிறார்.



    3வது நாளாக இன்று இந்த வழக்கு அவர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் தனபால் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

    பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் முதல்-அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு பெரும்பான்மையானவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு எதிராக, கவர்னரிடம் மனுதாரர்கள் 18 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

    கட்சிக்குள் உள்ள விவகாரத்தில், கட்சிக்குள் பேசி தீர்க்காமல், கவர்னரிடம் போய் புகார் செய்தால், அது சொந்த கட்சிக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகத்தான் கருதப்படும்.

    இதை தனி நபருக்கு எதிரான தாக்குதலாக கருத முடியாது. மனுதாரர்கள், தாங்கள் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுக்கவில்லை என்றும் முதல்அமைச்சருக்கு எதிராக மட்டுமே புகார் மனு கொடுத்ததாகவும் கூறுவதை ஏற்க முடியாது. இது தனிநபருக்கு எதிரான புகார் இல்லை.

    பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆளும் கட்சிக்கு எதிரான புகாராகும். மேலும், கவர்னரிடம் போய், இந்த 18 பேரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமையை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்துள்ளனர். கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஒரு மாநில அரசை கலைக்கும் அதிகாரம் தான் உள்ளது. அப்படிப்பட்டவரிடம் போய் கடமை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்தால், தமிழக அரசை கலைத்து விடுங்கள் என்று தானே அர்த்தம்.

    அதனால், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்ததில், சட்டவிதி மீறலோ, உள்நோக்கம் கொண்டதோ இல்லை. சபாநாயகர் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துதான் இறுதி முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவ்வாறு அவர் வாதிட்டார். அவரது வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து. 
    கவர்னர் குறித்து ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் கூற முயன்ற ஓ.எஸ் மணியனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் கவர்னர் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக ஒரு விளக்கத்தை சொல்ல கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார்.

    ஏற்கனவே கவர்னர் குறித்து இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்லிவிட்டேன். எனவே நீங்கள் அதுதொடர்பாக பேசி புதுப்பிரச்சினைக்கு போக வேண்டாம் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கேட்காமலேயே ஏன் பேசவேண்டாம் என்கிறீர்கள் என்று சபாநாயகரை பார்த்து கேட்டார். இதனால், சபாநாயகருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சபாநாயகர் கூறுகையில், ‘‘நீங்கள் பேசுவது எனக்கு சரியாக படாவிட்டால் உங்கள் பேச்சை நீக்க வேண்டியது வரும் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தான் சொல்ல நினைத்த கருத்தை எப்படியும் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பேச முற்பட்டார்.

    அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, கவர்னர் பற்றி மேற் கொண்டு பேச வேண்டாம் என்ற கருத்தில் சில வார்த்தைகளை தெரிவித்தார். உடனே சபாநாயகர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பேச வாய்ப்பு வழங்காமல் வேறு நிகழ்ச்சி நிரலை நடத்த தொடங்கினார்.

    தன்னை பேச அனுமதியுங்கள் என்று நின்று கொண்டிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு பேச வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர், உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜியும், உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கியுள்ளதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualification
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

    இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.



    சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-

    தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூற முடியாது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிபதிகள் குறைந்த அளவே தலையிட முடியும். சபாநாயகர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

    சபாநாயகர் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மற்றும் இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டும் நீதிமன்றம் தலையிட முடியும். தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்த வழக்கில் இல்லை. 

    கட்சியிலிருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல்தான் என்று கருத வேண்டும் என சுப்ரீம்  கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 

    இவ்வாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

    சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. தகுதி நீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம். ஆளுநரை சந்தித்து மனு கொடுத்ததை ஏற்றுக்கொண்டு கட்சித்தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது.

    அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதனை குலைக்க கொடுக்கவில்லை. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும் ஜக்கையனுக்கு ஒரு முடிவும் சபாநாயகர் எடுத்துள்ளார்.

    இந்த காரணங்களுக்கான சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது.

    இவ்வாறு நீதிபதி சுந்தர் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×